/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக்' பறிமுதல் :ரூ.15 ஆயிரம் அபராதம்
/
'பிளாஸ்டிக்' பறிமுதல் :ரூ.15 ஆயிரம் அபராதம்
ADDED : பிப் 16, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கூடலுாரில் வருவாய் துறையினர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட 7 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கூடலுார் பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்து வருவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. ஆர்.டி.ஓ., செந்தில்குமார் தலைமையில், தாசில்தார் ராஜேஸ்வரி வருவாய் ஆய்வாளர் கல்பனா, வி.ஏ.ஒ., ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம், இரவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, சில கடைகளில் இருந்து, தடை செய்யப்பட்ட, 7 கிலோ, பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

