ADDED : மே 26, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு:பாலக்காடு அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி இறந்தார்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பேட்டைக்காட்டை சேர்ந்த சுவாமிநாதனின் மகன் சக்தி வடிவேல், 49.
கூலித்தொழிலாளியான இவர், நேற்று காலை சாலையோரம் மின்கம்பம் அருகே உள்ள வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டினார். அப்போது, மரத்தின் கிளை ஒயரில் பட்டதில், அவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
தகவலறிந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினர், அவரது உடலை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். புதுச்சேரி (கசபா) போலீசார் விசாரிக்கின்றனர்.

