/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தகர ெஷட்டில் தீயணைப்பு நிலையம் நிரந்தர கட்டடம் எப்போது வரும்?
/
தகர ெஷட்டில் தீயணைப்பு நிலையம் நிரந்தர கட்டடம் எப்போது வரும்?
தகர ெஷட்டில் தீயணைப்பு நிலையம் நிரந்தர கட்டடம் எப்போது வரும்?
தகர ெஷட்டில் தீயணைப்பு நிலையம் நிரந்தர கட்டடம் எப்போது வரும்?
ADDED : ஆக 12, 2024 02:13 AM

கூடலுார்,;கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பழைய கோர்ட் சாலையில், தரக ெஷட்டில், 1980ம் ஆண்டு தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டது.
அதில், தீயணைப்பு வீரர்கள் தங்கி பணியாற்றி வருவதுடன், தளவாட பொருட்களையும் வைத்துள்ளனர். முன் பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ெஷட் மிகவும் சேதமடைந்து காணப்பட்ட நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், தீயணைப்பு வீரர்கள் தங்கள் சொந்த செலவில் தற்காலிகமாக சீரமைத்து, பயன்படுத்தி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆபத்தான நேரங்களில், மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு வீரர்கள் தற்காலிக தகர ெஷட்டில் அச்சத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இவர்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு, தீயணைப்பு நிலையத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டடம் அமைத்து தர வேண்டும்,' என்றனர்.