/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்நடைகளை 'பவுண்டில்' அடைக்கும் திட்டம் என்னாச்சு?
/
கால்நடைகளை 'பவுண்டில்' அடைக்கும் திட்டம் என்னாச்சு?
கால்நடைகளை 'பவுண்டில்' அடைக்கும் திட்டம் என்னாச்சு?
கால்நடைகளை 'பவுண்டில்' அடைக்கும் திட்டம் என்னாச்சு?
ADDED : மே 31, 2024 11:35 PM

ஊட்டி:ஊட்டி நகரில் சுற்றித் திரியும் கால்நடைகளை 'பவுண்டில்' அடைக்கும் திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.
சுற்றுலா நகரமான ஊட்டி சாலைகளில் நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க, சாலைகளில் கால்நடைகள் உலா வருவது தொடர்கிறது.
இந்நிலையில், ஊட்டி நகராட்சி ஊழியர்கள் மூலம், கால்நடைகளை பிடித்து காந்தள் பகுதியில் அடைப்பதாகவும், அதன் உரிமையாளர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், கால்நடைகளை பவுண்டில் இருந்து திருப்பாத ஒவ்வொரு நாளுக்கும், 500 ரூபாய் கூடுதலாக அபராதம் விதிப்பதாகவும் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு, டிரைவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போதுகால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின் சாலை மற்றும் ஐந்து லாந்தர் பகுதிகளில், சாலைகளில் கால்நடைகள் உலா வருவது தொடர்கிறது.
மக்கள் கூறுகையில்,'சில நாட்களுக்கு முன்பு, நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டும் கால்நடைகள் சாலைகளில் முகாமிடுகின்றன. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்,' என்றனர்.

