/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சொந்த பணிக்கு தேர்தல் வாகனம் : காத்திருப்போர் பட்டியலில் டிரைவர்
/
சொந்த பணிக்கு தேர்தல் வாகனம் : காத்திருப்போர் பட்டியலில் டிரைவர்
சொந்த பணிக்கு தேர்தல் வாகனம் : காத்திருப்போர் பட்டியலில் டிரைவர்
சொந்த பணிக்கு தேர்தல் வாகனம் : காத்திருப்போர் பட்டியலில் டிரைவர்
ADDED : ஏப் 17, 2024 12:58 AM

ஊட்டி;தேர்தல் அவசர வாகனத்தை சொந்த பணிக்காக பயன்படுத்தியதாக வந்த புகாரால், டிரைவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அரசு வாகனங்கள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான வாகனம் ஐ.டி., துறைக்கு ஒதுக்கப்பட்டது. அந்த வாகனத்தில் டிரைவராக மேகநாதன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 'தேர்தல் அவசரம்' வாகனத்தை எடுத்து கொண்டு சொந்த பணிக்கு பயன்படுத்தியுள்ளார். நகரில், 'தேர்தல் அவசரம் வாகனம்' சுற்றித் திரிந்ததை பார்த்த கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.
தேர்தல் பிரிவு அலுவலர் கண்ணன் கூறுகையில்,'' தனது சொந்த பணிக்காக, 'தேர்தல் அவசரம்' என்று ஒட்டப்பட்ட அரசு வாகனத்தில், டிரைவர் மேகநாதன் நகரில் சுற்றித்திரிவதாக புகார் வந்தது. இதனை அடுத்து அந்த டிரைவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.