/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பணம் வாங்காமல் ஓட்டளிப்போம்: உறுதிமொழி எடுத்த வாக்காளர்கள்
/
பணம் வாங்காமல் ஓட்டளிப்போம்: உறுதிமொழி எடுத்த வாக்காளர்கள்
பணம் வாங்காமல் ஓட்டளிப்போம்: உறுதிமொழி எடுத்த வாக்காளர்கள்
பணம் வாங்காமல் ஓட்டளிப்போம்: உறுதிமொழி எடுத்த வாக்காளர்கள்
ADDED : ஏப் 02, 2024 11:22 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே உப்பட்டி இலவச தையல் பயிற்சி மையத்தில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில், தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தையல் பயிற்சி ஆசிரியை சுலோச்சனா வரவேற்றார்.
பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''வாக்காளர்களுக்கு உள்ள ஒரே உரிமை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டு போடுவது தான்.
இதற்கு பணத்தை பெற்று கொண்டு ஓட்டளித்தால், நமக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். மேலும், ஊழல் நிறைந்து அனைத்து வகையிலும் பாதிப்புகளையே தரும். எனவே, நமது தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை, சுயமரியாதை உடன் நேர்மையான முறையில் மேற்கொள்ள வேண்டும். எனவே, அரசியல்வாதிகள் தரும் பணத்திற்கு, அடிபணியாமல் நேர்மையான முறையில் வாக்களிக்க அனைவரும் ஒன்றிணைந்து முன் வர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து நேர்மையான முறையில் வாக்களிப்பது குறித்த உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. அனைவரும் உறுதிமொழி பேனரில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில், பிரம்ம குமாரிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரேணுகா, 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் மற்றும் தையல் பயிற்சி பெண்கள் பங்கேற்றனர்.

