/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் கிணறு பிரச்னை; தீர்வு காண வலியுறுத்தல்
/
குடிநீர் கிணறு பிரச்னை; தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஏப் 14, 2024 09:39 PM
குன்னுார்:குன்னுார் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேல் பாரத் நகர் கிராமத்தில், 130 குடும்பங்கள் உள்ளன. இங்கு, 24 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட கிணற்றில் பாறை இருந்ததால், நீர் கிடைக்கவில்லை. மீண்டும் நான்கடி துாரத்தில் மற்றொரு கிணறு தோண்டப்பட்டது.
ஒரு கிணற்றில் மழை நீர் சேமிக்கப்பட்ட நிலையில், இரு கிணறுகளில் இருந்தும் மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அதில், ஒரு கிணறு கல்குழி கிராம பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் துணை கலெக்டர் ஆகியோருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. எனினும் நடவடிக்கை இல்லை.
இது குறித்து, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பிய ஊர் தலைவர் கனகராஜ் கூறுகையில், ''இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், புதிய குடிநீர் கிணறுக்கு மட்டுமே அனுமதி அளித்து நிதி வழங்கப்பட்டுள்ளது. பழைய குடிநீர் கிணற்றை இடித்து சரி செய்து, கல்குழி என பெயர் மாற்றம் செய்து, புது கிணறு, 10 லட்சம் ரூபாய் செலவில் வேலை செய்வதை போல் காண்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து ஆய்வு மேற்கொண்டு மேல் பாரத் நகருக்கு பழைய முறை படியே இரு கிணறுகளில் இருந்தும் குடிநீர் வழங்க வேண்டும்,''என்றார்.

