/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரயில் நிலையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள் வழித்தடங்களை பாதுகாக்க வலியுறுத்தல்

ADDED : மே 23, 2024 05:02 AM

குன்னுார்: குன்னுார் 'ஹில்குரோவ்' ரயில் நிலையத்தில் புகுந்த காட்டு யானைகள் கேண்டீனை சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டத்தில் மழையால் வன வளங்கள் பசுமைக்கு திரும்பி வருகின்றன. அதே நேரத்தில் பலாப்பழம் சீசனும் துவங்கியுள்ளது.
இதனால், சமவெளிப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், குன்னுார் மேட்டுப்பாளையம் மலை பாதைகளில் முகாமிட துவங்கியுள்ளன. இந்நிலையில், நேற்று காலை ஹில்குரோவ் ரயில் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள கேண்டீனை துவம்சம் செய்தது. கதவுகளை உடைத்து உள்ளே சென்று பொருட்களை சூறையாடியதுடன் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளன.
தண்ணீர் குடிக்க குழாய்களை உடைத்துள்ளன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். தகவலின் பெயரில் வனத்துறையினர் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.
யானை வழித்தடம் பாதிப்பு :
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'குன்னுார்- மேட்டுப்பாளையம் மலையோரம் வனப்பகுதிகளில் உள்ள இடங்களில் சமீப காலமாக தனியார் மூலம் பொக்லைன் பயன்படுத்தி சாலை அமைப்பதும். பாலங்கள் அமைப்பதும் நடந்து வருகிறது.ஏற்கனவே நிலச்சரிவு அபாயம் உள்ள இந்தப் பகுதிகளில் யானைகள் நடந்த செல்லும் வழித்தடங்களும் அழிக்கப்படுவதால் போதிய உணவுகள் கிடைக்காமல் ஆக்ரோஷத்துடன் தடம் மாறி செல்லும் யானைகள் உணவுக்காக ரயில் நிலைய கேண்டீனை சேதப்படுத்தி உள்ளன. இதனால், யானை வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.