/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏரியில் புதிய படகுகள் :சுற்றுலா பயணிகள் ஆர்வம்
/
ஏரியில் புதிய படகுகள் :சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ADDED : ஏப் 15, 2024 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டியில் படகு இல்லத்தில் உள்ள புதிய படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஊட்டியில் கடந்த நான்கு நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இங்கு வெயிலின் தாக்கம் குறைவு என்பதால், கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் சில நாட்கள் தங்கி செல்கின்றனர்.
இவர்கள், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டாவுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்ய தவறுவதில்லை.
தற்போது, படகு இல்லத்தில் பல புதிய படகுகள் சவாரியில் உள்ளதால், அதில் செல்ல, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

