/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கழிவுநீர் வடிகால் இல்லை கண்ணீர் விடும் மக்கள்
/
கழிவுநீர் வடிகால் இல்லை கண்ணீர் விடும் மக்கள்
ADDED : ஜூலை 24, 2024 12:18 AM

அன்னூர்;கரியாம்பாளையத்தில், கழிவு நீர் வடிகால் இல்லாததால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
கரியாம்பாளையத்தில், சி.எஸ்.ஐ., வீதியில், ஓர் ஆண்டுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் கட்டும் பணி துவங்கியது. பாதி தூரம் வரை கட்டப்பட்டது. அதன் பிறகு பணி நிறுத்தப்பட்டது.
இங்கு கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால், பிரதான சாலையில் உள்ள பிரதான கழிவுநீர் வடிகால் உடன் இணைக்கப்படவில்லை. இதனால் இங்கு கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில்,' ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளன. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
விரைவில் இங்கு தேங்கியுள்ள கழிவுநீர் வடிந்து செல்வதற்கு வடிகால் கட்ட வேண்டும். தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும்,' என்றனர்.

