/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் மது குடிக்கும் இடமாக மாறிய நிழல் குடை அகற்றினால் பாதிப்பில்லை
/
எல்லையில் மது குடிக்கும் இடமாக மாறிய நிழல் குடை அகற்றினால் பாதிப்பில்லை
எல்லையில் மது குடிக்கும் இடமாக மாறிய நிழல் குடை அகற்றினால் பாதிப்பில்லை
எல்லையில் மது குடிக்கும் இடமாக மாறிய நிழல் குடை அகற்றினால் பாதிப்பில்லை
ADDED : செப் 17, 2024 05:31 AM

கூடலுார்: கூடலுார் கீழ்நாடுகாணி அருகே மாநில எல்லையில் பயனற்று காணப்படும் நிழல்குடை, மது குடிக்கும் இடமாக மாறி உள்ளது.
கூடலுாரில் இருந்து, கேரளா மாநிலம் நிலம்பூருக்கு நேரடி பஸ் வசதி இல்லை. பயணிகள் வசதிக்காக, மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை, கூடலுாரில் இருந்து தமிழக அரசு பஸ்சும்; நிலம்பூரிலிருந்து கேரளா அரசு மற்றும் தனியார் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் மாநில எல்லையான கீழ்நாடுகாணியில் இறங்கி, இரு மாநில பஸ்களை மாறி பயணத்தை தொடர்ந்தனர். இப்பகுதியில் பயணிகள் வசதிக்காக, நெல்லியாளம் நகராட்சி சார்பில் நிழல்குடை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கேரளா அரசு போக்குவரத்து துறை சார்பில் பெருந்தல்மன்னாவில் இருந்து நிலம்பூர் வழியாக, கூடலுாருக்கு நேரடி பஸ் இயக்கப்பட்டது.
இதனால், கூடலுார், நிலம்பூரில் இருந்து மாநில எல்லையான, கீழ் நாடுகாணி வரை இயக்கப்பட்ட இரு மாநில அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. அங்கு அமைக்கப்பட்ட நிழல்குடை பயனின்றி, பராமரிப்பின்றி உள்ளது. அந்த நிழல் குடையில் அமர்ந்து மது குடித்து ஓய்வெடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், அங்கு மது பாட்டில்கள், நீலகிரி யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குப்பை குவிந்து காணப்படுகிறது.
எனவே, பராமரிப்பு இன்றி கிடக்கும் நிழல் குடையை அகற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

