/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை சாகுபடிக்கு சிறப்பு திட்டங்கள்; விவசாயிகளுக்கு அறிவுரை
/
கோடை சாகுபடிக்கு சிறப்பு திட்டங்கள்; விவசாயிகளுக்கு அறிவுரை
கோடை சாகுபடிக்கு சிறப்பு திட்டங்கள்; விவசாயிகளுக்கு அறிவுரை
கோடை சாகுபடிக்கு சிறப்பு திட்டங்கள்; விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஏப் 23, 2024 10:29 PM
பெ.நா.பாளையம் : கோவை மாவட்டத்தில் கோடை சாகுபடிக்கு சிறப்பு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு, வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையாக, 609 மி.மீ., மழை பொழிகிறது. இதில், கோடையில் ஏப்., மாதத்தில், 36.5 மி.மீ., மே மாதத்தில், 75.60 மி.மீ., மழை சராசரியாக பெய்து வருகிறது. மேலும், கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக சோளம், 65 ஆயிரம் ஏக்கரிலும், மக்காச்சோளம் 10 ஆயிரம் ஏக்கரிலும், கம்பு, 450 ஏக்கரிலும், ராகி, 40 ஏக்கரிலும், நிலக்கடலை, 10 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், இரண்டாம் பருவ கோடையில் சராசரியாக சோளம், ஆயிரம் ஏக்கரிலும், கம்பு, 185 ஏக்கரிலும், எள், 25 ஏக்கரிலும், சாகுபடி செய்யப்படுகிறது.
தேவையான சோளம், கம்பு, நிலக்கடலை, சான்று விதைகள், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்க தேவையான திரவ உயிர் உரங்கள், உயிர் பூஞ்சான கொல்லிகள் மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளன.
கோவை மாவட்டத்தில் நடப்பு கோடையில் சிறப்பு திட்டமாக சிறுதானியங்கள், 4400 ஏக்கர், பயிறு வகைகள், 850 ஏக்கர் நிலக்கடலை, 2500 எள், 750 ஏக்கர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் சார்பாக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளுமாறு கோவை வேளாண்மை இணை இயக்குனர் பெருமாள்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

