/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் யானைகள் முகாம் வனத்துறை கண்காணிப்பு
/
சாலையோரம் யானைகள் முகாம் வனத்துறை கண்காணிப்பு
ADDED : ஏப் 23, 2024 02:17 AM

பந்தலுார்;பந்தலுார் -கோழிக்கோடு நெடுஞ்சாலையில், காபிக்காடு என்ற இடத்தில் சாலையோரம் யானைகள் முகாமிட்டு உள்ளதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பந்தலுாரில் இருந்து, கேரளா மாநிலம் கோழிக்கோடு, வயநாடு சுல்தான் பத்தேரி, எருமாடு, வைத்திரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இங்கு காபிக்காடு என்ற இடத்தில் சாலையோரம் உள்ள புதர் பசுமையாக உள்ளதுடன், தண்ணீர் வசதியும் உள்ளது.
இதனால், இங்கு, 9 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளது.
கடந்த ஒரு வாரமாக யானைகள் முகாமிட்டு உள்ள நிலையில், சாலையின் இரண்டு பக்கத்திலும் சேரம்பாடி வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி இறங்க கூடும் என்பதால், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், வனத்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

