/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் மழையால் விழுந்த மரங்கள்: போக்குவரத்து பாதிப்பால் சிக்கல்

ADDED : மே 21, 2024 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்;குன்னுாரில் இரவில் பெய்த மழையால் மரங்கள் விழுந்தன.
குன்னுார் பகுதிகளில் இரவில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதில், மவுண்ட் பிளசன்ட் சாலையோரம் விடுதி அருகே கிளைகளுடன் மரம் விழுந்தது. இதேபோல, காந்திபுரம் பகுதியில் குடியிருப்பு அருகே மரத்தின் மீது மற்றொரு மரம் விழுந்தது.
இதனால், அருகில் இருந்த குடியிருப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலின் பேரில் குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.