/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வறட்சியிலும் பூத்து குலுங்கும் 'மயில் கொன்றை' மலர்கள்
/
வறட்சியிலும் பூத்து குலுங்கும் 'மயில் கொன்றை' மலர்கள்
வறட்சியிலும் பூத்து குலுங்கும் 'மயில் கொன்றை' மலர்கள்
வறட்சியிலும் பூத்து குலுங்கும் 'மயில் கொன்றை' மலர்கள்
ADDED : ஏப் 14, 2024 11:33 PM

கூடலுார்:முதுமலை, தெப்பக்காடு பகுதியில் கோடையிலும் பூத்து குலுங்கும் 'மயில் கொன்றை' மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் நடப்பாண்டு தொடர்ந்து கோடை மழை ஏமாற்றி வருகிறது. வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து தாவரங்கள் கருகியும், மரங்களில் இலைகள் உதிர்ந்து வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது.
வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. யானை, காட்டெருமை போன்ற தாவர உண்ணிகள் உணவு குடிநீர் தேடி இடம்பெயர் துவங்கியுள்ளது.
வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தெப்பக்காடு - மசினகுடி சாலையின் இரு புறமும் உள்ள மரங்களில் 'மயில் கொன்றை' பூக்கள் பூத்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், இதன் அழகை வெகுவாக ரசித்து 'செல்பி' எடுத்து செல்வதிலும் ஆர்வம் கட்டி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'வறட்சியின் காரணமாக முதுமலை பெரும்பகுதி பசுமை இழந்து காணப்படும் நிலையில், தெப்பக்காடு சாலை, பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்களின் அழகு மனதுக்கு இதமாக உள்ளது,' என்றனர்.

