/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாண்டியார் - புன்னம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
/
பாண்டியார் - புன்னம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ADDED : மே 19, 2024 11:18 PM

கூடலுார்:கூடலுாரில் பெய்து வரும் கனமழையினால், பாண்டியார் - புன்னம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூடலுார் சுற்றப்புபகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இங்கு உற்பத்தியாகி கேரளா நோக்கி செல்லும் பாண்டியார் - புன்னம்புழா ஆறு மற்றும் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதை தொடர்ந்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம், ஆர்.டி.ஓ., செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
அதில், 'மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில், அரசு துறையில் ஒருங்கிணைந்து மீட்பு பணியில் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். புன்னம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் ஆற்று பகுதிக்கு செல்ல கூடாது,' என, அறிவுறுத்தப்பட்டது.
கூடலுார் தாசில்தார் ராஜேஸ்வரி, தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

