/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை வெள்ள பாதிப்பு தவிர்க்க முன்னேற்பாடு பாலக்காடு மாவட்ட நிர்வாகம் தீவிரம்
/
மழை வெள்ள பாதிப்பு தவிர்க்க முன்னேற்பாடு பாலக்காடு மாவட்ட நிர்வாகம் தீவிரம்
மழை வெள்ள பாதிப்பு தவிர்க்க முன்னேற்பாடு பாலக்காடு மாவட்ட நிர்வாகம் தீவிரம்
மழை வெள்ள பாதிப்பு தவிர்க்க முன்னேற்பாடு பாலக்காடு மாவட்ட நிர்வாகம் தீவிரம்
ADDED : மே 22, 2024 12:06 AM
பாலக்காடு;பாலக்காடு மாவட்டத்தில், கோடைகால மழை பாதிப்பு தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் சமீப நாட்களாக கோடை மழை தீவிரமடைந்து உள்ளது. இதை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை துவங்கவுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையில், கட்டுப்பாட்டு அறை செயல்பட துவங்கியுள்ளன. 24 மணி நேரமும் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
இதுகுறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி கூறியதாவது:
மழை வெள்ளம் மற்றும் மண் சரிவு அச்சுறுத்தல் பகுதிகளை கண்டறிந்து, இப்பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது, நிவாரண முகாம்கள் இல்லை என்றாலும், அனைத்து தாலுகாவை மையமாகக் கொண்டு நிவாரண முகாம்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேவை என்றால் பொதுமக்களை உடனடியாக முகாம்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுஉள்ளன.
கனமழை எச்சரிக்கை ஏற்பட்டால், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்கள் வரும் நாட்களில், முன்னெச்சரிக்கை அடிப்படையில் இடம்பெயரத் தயாராக வேண்டும். அணைகளின் கீழ்பகுதியிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள், அணைகளில் இருந்து தண்ணீர் நிரம்பி வழியும் முன்பே, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 0491- - 2505292, பாலக்காடு: 0491 - -2505770, ஆலத்தூர்: 04922 --- -222324, சித்தூர்: 04923 - -224740, ஒற்றப்பாலம்: 0466- - 2244322, மண்ணார்க்காடு: 04924 - -222397, பட்டாம்பி: 0466- - 2214300, அட்டப்பாடி: 0492 - -4291470.
இவ்வாறு, அவர் கூறினார்.

