/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையோர நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
/
எல்லையோர நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
ADDED : மார் 28, 2024 05:18 AM
ஊட்டி : ஊட்டியில் லோக்சபா தேர்தல் சம்பந்தமாக, நீலகிரி மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு இடையே, எல்லையோர நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், இரு மாவட்ட எல்லை பகுதிகளில், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, 'மாவோயிஸ்ட்' இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, பணப் பரிவர்த்தனை, மது உட்பட, போதைப்பொருட்களின் விற்பனையை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், அனுமதியற்ற படைக்கலன்களின் பரிமாற்ற விபரங்கள், மனித-விலங்கு மோதலால் ஏற்படும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை, இரு மாவட்ட எல்லையில், நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர இயலாத குற்றவாளிகள் தொடர்பான விபரங்கள் குறித்து, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் உருவாக்கி தொடர்பு கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

