/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வற்றும் நிலையில் முதுமலை மாயாறு குடிநீர் தட்டுப்பாடு!வன உயிரினங்கள் பாதிக்கும் அபாயம்
/
வற்றும் நிலையில் முதுமலை மாயாறு குடிநீர் தட்டுப்பாடு!வன உயிரினங்கள் பாதிக்கும் அபாயம்
வற்றும் நிலையில் முதுமலை மாயாறு குடிநீர் தட்டுப்பாடு!வன உயிரினங்கள் பாதிக்கும் அபாயம்
வற்றும் நிலையில் முதுமலை மாயாறு குடிநீர் தட்டுப்பாடு!வன உயிரினங்கள் பாதிக்கும் அபாயம்
ADDED : ஏப் 14, 2024 11:54 PM

கூடலுார்;முதுமலையில் தொடரும் வறட்சியால், மாயார் ஆற்றில் நீர்வரத்து குறைந்து
வற்றும் நிலை உருவாகி வருவதால், வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு
அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை காலத்தில் மாயார் ஆறு, ஒம்பெட்டா, கேம்ஹட் தடுப்பணைகள் உள்ளிட்ட சில முக்கிய நீர் ஆதாரங்கள் வனவிலங்குகளில் குடிநீர் தேவை பூர்த்தி செய்து வருகின்றன.
கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதுடன், நடப்பாண்டு ஏமாற்றி வரும் கோடை மழையால், வனப்பகுதியில் கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் ஏற்பட்டு, தாவரங்கள் கருகியும், மரங்களில் இலைகள் உதிர்ந்து வனப்பகுதி பசுமை இழந்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யானை, காட்டெருமை போன்ற தாவர உண்ணிகள் உணவு குடிநீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.
கடும் வறட்சியான பகுதிகளில், வன விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் மாயார் ஆற்றிலிருந்து வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று, சிமென்ட் தொட்டிகளில் சுழற்சி முறையில் ஊற்றி வருகின்றனர். எனினும் போதிய உணவு கிடைக்காமல் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள், உடல் மெலிந்து காணப்படுவது பரிதாபமாக உள்ளது. இந்நிலையில், கோடையில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை அதிக அளவில் பூர்த்தி செய்து வரும் மாயார் ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருகிறது. வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வனவிலங்குகளுக்கு மட்டுமின்றி, தொப்பக்காடு, அபயாரண்யம் யானை முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. நீர் ஆதாரங்கள் உள்ள பகுதிகளில், தற்காலிகமாக வளர்ப்பு யானைகள் முகாம் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மழை வந்தால் மட்டுமே தீர்வு
வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும், நடப்பு ஆண்டு கோடை மழை ஏமாற்றி வருவதால் வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்து வரும் மாயார் ஆற்றிலும் நீர் வரத்து குறைந்து வருவதால், வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. கோடை மழை பெய்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இதனால், கோடை மழையை எதிர்பார்த்து காத்துஉள்ளோம்,' என்றனர்.

