/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஓட்டுச்சாவடி மையத்தில் பராமரிப்பு
/
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஓட்டுச்சாவடி மையத்தில் பராமரிப்பு
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஓட்டுச்சாவடி மையத்தில் பராமரிப்பு
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஓட்டுச்சாவடி மையத்தில் பராமரிப்பு
ADDED : ஏப் 05, 2024 10:33 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே, சேரம்பாடி கண்ணம்வயல் பகுதி, தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இங்குள்ள ஓட்டுச்சாவடி மையம் வனத்தை ஒட்டி அமைந்துள்ளதாலும், இந்த வனப்பகுதி, தமிழக - கேரளா இணைப்பு பகுதியாக இருப்பதாலும், அவ்வப்போது இதனை ஒட்டிய கேரள வனப்பகுதியில் அடிக்கடி நக்சல்கள் வந்து செல்கின்றனர்.
சமீப காலமாக நக்சல்கள் நடமாட்டம் இந்த பகுதியில் இல்லாமல் இருந்த போதும், தேர்தல் நேரங்களில் ஏதேனும் நாச வேலைகளில் நக்சல்கள் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், இந்த பகுதி போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. அத்துடன் இந்த ஓட்டுச்சாவடி மையத்தில், கழிவறை, தரைகள் பராமரிப்பு மற்றும் மின் வசதி குறித்து, தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சேரங்கோடு ஊராட்சி மூலம் பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், ' தேர்தல் நடக்கும்முன்பாக மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்,'என, தெரிவிக்கப்பட்டுள்ளது.