/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'சி-விஜில்' செயலி மூலம் பெறப்பட்ட புகார்கள் ஆய்வு
/
'சி-விஜில்' செயலி மூலம் பெறப்பட்ட புகார்கள் ஆய்வு
ADDED : ஏப் 04, 2024 10:56 PM
ஊட்டி;ஊட்டியில் 'சி-விஜில்' செயலி மூலம் பெறப்பட்ட புகார்கள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
மாநிலத்தில் லோக்சபா தேர்தல், ஏப்., 19ல் ஒரே கட்டமாக நடக்கிறது. அதற்காக, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 'சி-விஜில்' செயலி மூலம் பெறப்பட்ட புகார்கள் குறித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கட்டுப்பாடு அறையின் தொலைபேசி வாயிலாக, பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
மேலும், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக, 12டி படிவங்கள் வழங்கப்பட்டு, விருப்பம் தெரிவித்த நபர்களுக்கு தபால் சீட்டுகள் தொகுதி பொறுப்பு அலுவலரிடம் வழங்கப்பட்டது.

