/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் :அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

ADDED : ஏப் 22, 2024 01:30 AM

குன்னுார்;குன்னுார் நகராட்சி சார்பில் நடந்த புஷ்ப பல்லக்கு உற்சவத்தில், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர்.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த, 5ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவில், குன்னுார் நகராட்சியின், 62வது ஆண்டு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.
கிருஷ்ணாபுரத்தில் இருந்து துவங்கிய அபிஷேக பொருட்கள் ஊர்வலத்தில் பேண்ட் இசை முழங்க, ஆடல், பாடல்களுடன் பக்தர்கள் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
ஊர்வலத்தில் நகராட்சி ஊழியர் ரங்கராஜ், முதுகில், அலகு குத்தி, அதில், இளநீர் காய்களை இழுத்து வந்தார். இதே போல, முகத்தில் வேல் சூலாயுதம் அலகு குத்தியும், தீச்சட்டியை ஏந்தியும் பக்தர்கள் வந்தது பரவசப்படுத்தியது.
தொடர்ந்து மதியம் அம்மன் திருவீதி உலா நடந்தது. அன்னதானம், வான வேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் செய்திருந்தனர்.