/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுமையில் நேரு பூங்கா பார்வையாளர் இல்லாமல் 'வெறிச்'
/
பசுமையில் நேரு பூங்கா பார்வையாளர் இல்லாமல் 'வெறிச்'
பசுமையில் நேரு பூங்கா பார்வையாளர் இல்லாமல் 'வெறிச்'
பசுமையில் நேரு பூங்கா பார்வையாளர் இல்லாமல் 'வெறிச்'
ADDED : மே 22, 2024 12:20 AM

கோத்தகிரி:கோத்தகிரி நேரு பூங்கா பசுமைக்கு திரும்பியுள்ள நிலையில், மழை காரணமாக பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோத்தகிரி நகர மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்காவில், கோடை விழாவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு, லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், காய்கறி கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், கோத்தகிரி வழியாக செல்லும் போது, சாலையோரத்தில் அமைந்துள்ள நேரு பூங்காவின் அழகை கண்டு ரசித்து செல்கின்றனர்.
கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வரும் பூங்கா, தற்போது பசுமைக்கு திரும்பி, மலர்கள் பூத்துள்ளன. இதனை, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக, கோடை விடுமுறையில் பள்ளி சிறுவர்கள் ரசித்து செல்கின்றனர்.
தற்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால், பூங்காவில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
நேற்று மாலை, 5:00 மணிவரை, 100க்கும் குறைவான பயணிகள் மட்டுமே, பூங்காவுக்கு வருகை புரிந்துள்ளனர்.

