/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு வாரங்களாக குடிநீர் வரல போராட்டத்தை தவிர வழி தெரியல
/
இரு வாரங்களாக குடிநீர் வரல போராட்டத்தை தவிர வழி தெரியல
இரு வாரங்களாக குடிநீர் வரல போராட்டத்தை தவிர வழி தெரியல
இரு வாரங்களாக குடிநீர் வரல போராட்டத்தை தவிர வழி தெரியல
ADDED : ஏப் 08, 2024 11:43 PM

ஊட்டி:ஊட்டி கிரீன் பீல்டு பகுதியில் குடிநீர் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதால் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கிரீன் பீல்ட் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு, இரண்டு வாரத்திற்கு மேலாக தண்ணீர் வினியோகிக்கவில்லை. கடுமையாக பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று, அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ பகுதிக்கு வந்த போலீசார், நகராட்சி அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்களது வார்டு பகுதிக்கு குடிநீர் வந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மறியலில் ஈடுபட்டோம்.
நீராதார பகுதியில் தண்ணீர் இல்லை என்றாலும், லாரிகள் மூலமாக, தண்ணீர் கொண்டு வந்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.

