/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உரிமையை நிறைவேற்றிய முதல் வாக்காளர்கள்
/
உரிமையை நிறைவேற்றிய முதல் வாக்காளர்கள்
ADDED : ஏப் 20, 2024 12:27 AM

ஊட்டி;நீலகிரியில் முதல் வாக்காளர்கள் பலர் ஆர்வத்துடன் ஓட்டு சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி போது கூறியதாவது:
விஷால், மஞ்சூர்
ஜனநாயக நாட்டின் முக்கிய கடமைகளில் முதன்மையானது, அனைவரும் கட்டாயம் ஓட்டளித்து, நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன்படி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மக்களுக்கான நல்ல திட்டங்களை அளிக்கும் கட்சிக்கு எனது முதல் ஓட்டை பதிவு செய்தேன்.
கிருஷ்ணன், மஞ்சூர்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதும், எப்போது தேர்தல் வரும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்து, வளர்ச்சி பாதைக்கு மக்களை கொண்டு செல்லும் கட்சிக்கு எனது முதல் ஓட்டை பதிவு செய்தேன்.
அக்சயா, கோத்தகிரி
ஜனநாயக கடமை ஆற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
மிகவும் ஆர்வமாக சென்று ஓட்டளித்தேன். நாட்டிற்கு நல்ல தலைவர் வேண்டுமென்று எண்ணத்தில் ஓட்டு போட்டேன்.
துளசி, ஊட்டி
நான் எனது ஜனநாய கடமையை நிறைவேற்று உள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வரும் தேர்தல்களிலும் நிச்சயம் இந்த கடமையை நிற்வேற்றுவேன்.
ஸ்ரீனா, ஊட்டி
முத்தான முதல் ஒட்டு என்பது, ஜனநாயகத்தில் கடமையாற்ற எனக்கு கிடைத்த வாய்ப்பு. இதுவும் பெருமையாக உள்ளது. காலையில் எழுந்தவுடன், ஓட்டு போட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓட்டுச் சாவடிக்கு வந்தேன். முதல் ஓட்டை பதிவு செய்தேன் மிகவும் பெருமையாக உள்ளது.
பாரதி, கூடலுார்
நான் முதல் முறையாக மகிழ்ச்சியுடன் ஓட்டளித்துள்ளேன். என்னை போன்று இளைய தலைமுறைகள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். சரியான தலைவரை தேர்ந்தெடுத்து ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.
சோனா, கூடலுார்-
எனது முதல் ஓட்டு பதிவு செய்தது, பெரிய விஷயத்தில் சாதித்த போன்ற பெருமையாக உள்ளது. என் நண்பர்களையும், தவறாமல் முதல் ஓட்டை பதிவு செய்ய அழைத்துள்ளேன். அதன், அனுபவங்களையும் நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
டினு, கூடலுார்-
பள்ளி படிப்பு முடிந்து கல்லுாரிக்கு செல்லும் நிகழ்வு மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. அதுபோன்ற சந்தோசம் முதல் ஓட்டை பதிவு செய்யும் போது ஏற்பட்டது. நல்லவர்களை தேர்ந்தெடுக்க நாம் ஜனநாயக கடமையை செய்வது அவசியம்.
காயத்ரி, தனபிரியா, பந்தலுார்
தேர்தல் நாளன்று மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் இந்த ஓட்டளிப்பதை பார்த்தபோது, நாங்களும் நம் நாட்டுக்கான ஓட்டளிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. தற்போது, எங்களாலும் நாட்டிற்கு நல்ல தலைவர்களை தேர்வு செய்ய இயலும் என்ற நம்பிக்கையுடன் ஓட்டளித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
தேஜஸ்ரீ, குன்னுார்
மக்களால் தேர்வு செய்யப்பட்டு நாட்டை ஆள்பவர்கள், கொள்ளையடிப்பவர்களாக இருக்காமல், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக எனது முதல் ஓட்டு பதிவு செய்துள்ளேன்.
சுணில், அருவங்காடு
ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு அதிகம் வழங்க வேண்டும். ஆட்சிக்கு புதிதாக வருபவர்கள் வர வேண்டும் என்பதற்கான எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன்.
திவ்யா, பந்தலுார்
எனது முதல் ஓட்டு என்பது எனது கவுரவம். அதனை பதிவு செய்ய சென்ற போது, தேர்வு எழுத செல்வது போன்ற பரபரப்பு இருந்தது. நம் நாட்டின் முக்கிய தலைவர்களை தேர்வு செய்யும் இந்த வாய்ப்பை ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் பின்பற்றுவேன்.

