/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்: மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு

ADDED : மே 19, 2024 11:25 PM

கூடலுார்;கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை நடுவட்டம் அருகே உள்ள கோவில் பகுதியில் இருந்த மரம் விழுந்ததால், மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை நடுவட்டம் அருகே, பழமையான முனீஸ்வரன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள மரம் நேற்று, காலை, 8:00 மணிக்கு, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்தது.
அதில், கோவிலில் இருந்த சிமென்ட் குதிரையும் சேதமடைந்தது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், கூடலுார், கேரளா, கர்நாடகா சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை துறையினர், பொக்லைன் உதவியுடன் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.