/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை நடமாட்டம்: ஓட்டு சாவடிகளில் வன ஊழியர்கள்
/
யானை நடமாட்டம்: ஓட்டு சாவடிகளில் வன ஊழியர்கள்
ADDED : ஏப் 19, 2024 12:44 AM

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் தொகுதியில் வனத்தை ஒட்டி அமைந்துள்ள, 47 ஓட்டுச் சாவடிகளில், அவ்வப்போது யானைகள் நடமாட்டம் உள்ளது. அதில் ஓவேலி பகுதியில், 16 ஓட்டுச்சாவடிகளில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இப்பணிகளை ஓவேலி வனச்சரகர் சுரேஷ்குமார், பறக்கும் படை வனச்சரகர் இலியாஸ மீரான், வனவர் சுபத்குமார் மற்றும் வான ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது:
வனத்தை ஒட்டிய, 47 ஓட்டுச்சாவடிகளில் யானைகள் நடமாட்டம் குறித்து, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஒரு வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் இருப்பர்.
மேலும், ஒவ்வொரு வனச்சரகத்திற்கும் இரண்டு வனத்துறை வாகனங்களில் வன ஊழியர்கள், ரோந்து பணியில் ஈடுபடுவர்.
வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வரும் வழியில், யானைகள் நடமாட்டம் இருப்பது குறித்து தெரிய வந்தால், அவர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்து செல்வதற்காக வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

