/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வளர்ச்சி பணிகளுக்கு செலவிடுவதில்லை; மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு
/
வளர்ச்சி பணிகளுக்கு செலவிடுவதில்லை; மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு
வளர்ச்சி பணிகளுக்கு செலவிடுவதில்லை; மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு
வளர்ச்சி பணிகளுக்கு செலவிடுவதில்லை; மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : ஆக 29, 2024 10:04 PM
கூடலுார் : கூடலுார் நகர மன்ற கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொ) முனியப்பன் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் லீலாவாசு: எங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் சப்ளை இல்லை. பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.
ராஜேந்திரன்: நகராட்சி வருவாயில் அலுவலக செலவு அதிகமாக உள்ளது. வளர்ச்சி பணிகளுக்கு அதிகம் செலவிடுவதில்லை. குடிநீர் இணைப்பு வழங்கியதில் தவறு நடந்துள்ளது. உழவர் சந்தையில் குப்பை எடுக்காதது குறித்து ஆய்வுக்கு வந்த, நகராட்சி அதிகாரிகளை, குப்பை அகற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் தரகுறைவாக பேசினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: உறுப்பினர், முதலில் வார்டு பிரச்னைகளை பேச வேண்டும்; பொதுபிரச்சனையை பின்னால் பேசலாம்.
இதற்கு, ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்; தொடர்ந்து, மன்றத்தில் காத்திருப்பு போராட்டதில் ஈடுபட்டார். அவரை தலைவர் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்தார்.
உஸ்மான்: நகராட்சியில் தினமும் அகற்றப்படும் குப்பைகள், எடை பார்ப்பதில் முறைகேடுகள் நடந்து வருகிறது.
நிர்வாகத்துக்கு தெரியாமல், தனிப்பட்ட நபர் கேரளாவுக்கு கோழி கழிவுகளை விற்பனை செய்துள்ளார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனுக்கான்: நகராட்சி பராமரிப்பில் உள்ள சாலைகளை 'சர்வே' செய்து ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமிஷனர்: சாலைகளை 'சர்வே' செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின் போது, யாரும் இடையூறு செய்யக்கூடாது. தொடர்ந்து, கவுன்சிலர்கள் வார்டு பிரச்னை குறித்து பேசினர்.
கூட்டத்தில், நகராட்சி பொறியாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரன், மேலாளர் சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். துணை தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.

