/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரமில்லாத நடைபாதை இடிந்ததால் அதிருப்தி
/
தரமில்லாத நடைபாதை இடிந்ததால் அதிருப்தி
ADDED : ஏப் 02, 2024 11:23 PM

குன்னுார்;குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 15வது வார்டு முத்தாலம்மன் பேட்டை அருகில், தி.மு.க., பெண் கவுன்சிலர் செல்வி வீடு உள்ள தாழ்வான இடத்தில், 4 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதிக்கு செல்ல, 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. எனினும், சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதால் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
முத்தாலம்மன் பேட்டை மக்கள் கூறுகையில், 'மக்கள் வசிக்கும் முத்தாலம்மன் பேட்டைக்கு நடைபாதை சீரமைத்து தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 4 குடும்பங்கள் இருக்கும் கவுன்சிலர் வீட்டிற்கு செலவு செய்து சாலை அமைக்கப்பட்டும் அது இடிந்துள்ளது,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'கவுன்சிலர் கோரிக்கைக்கு பிறகே சிமென்ட் சாலை புதிதாக அமைக்கப்பட்டது. அந்த வீடுகள் உள்ள பகுதியில் இருந்து முத்தாலம்மன் பேட்டைக்கு விரைவில் நிதி ஒதுக்கி சாலை அமைக்கப்படும்,' என்றனர்.

