/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை ஏலத்தில் வரத்து விற்பனையில் தொடர் சரிவு
/
தேயிலை ஏலத்தில் வரத்து விற்பனையில் தொடர் சரிவு
ADDED : மே 31, 2024 11:40 PM
குன்னுார்;குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில் வரத்து மற்றும் விற்பனையில் தொடர் சரிவு ஏற்பட்டதால், ஒரே வாரத்தில்,1.69 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 21வது ஏலத்தில், '6.86 லட்சம் கிலோ இலை ரகம்; 2.62 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 9.20 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.
அதில், '6.73 லட்சம் கிலோ இலை ரகம்; 2.15 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, 8.88 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 9.34 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலையாக கிலோவுக்கு, 105.16 ரூபாயாக இருந்தது;கிலோவுக்கு 5 ரூபாய் வரை ஏற்றம் கண்டது.
கடந்த ஏலத்தை விட, 1.80 லட்சம் கிலோ தேயிலை தூள் வரத்து குறைந்ததுடன், 1.83 லட்சம் கிலோ விற்பனையும் சரிந்தது. ஒரே வாரத்தில் 1.39 கோடி ரூபாய் மொத்த வருமானமும் சரிந்தது. எனினும், சராசரி விலையில் ஏற்றம் கண்டு வருவதால் பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயம் சற்று ஏற்றம் கண்டு விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

