/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் நெரிசல்: அணிவகுத்த வாகனங்கள்
/
மலை பாதையில் நெரிசல்: அணிவகுத்த வாகனங்கள்
ADDED : ஏப் 29, 2024 01:26 AM

குன்னுார்;குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைபாதை ஒரு வழிப்பாதையாக மாற்றிய போதும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையில், ஒரு வழிப்பாதையாக, வார இறுதி நாட்களில் மட்டுமே இருந்த நிலையில், மே 1ம் தேதி முதல் நாள்தோறும், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் வாகனங்கள் பர்லியார் குன்னூர் வழியாகவும், சமவெளிக்கு செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதில், குன்னுார் 'லெவல் கிராசிங்' பகுதியில் வாகனங்களை, போலீசார் திருப்பி விடுவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து சீர் செய்ய போலீசார் சிரமப்படுகின்றனர்.
டிரைவர்கள் கூறுகையில், ' இப்பகுதியில் ஏற்படும் கடும் நெரிசலை தவிர்க்க உள்ளூர் வாகனங்களை மட்டும், குன்னுார்- பர்லியார்- மேட்டுப்பாளையம் மலைபாதையில் அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.

