ADDED : ஏப் 24, 2024 09:44 PM

பந்தலுார் : கேரளாவில், 26ல் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தமிழக எல்லையில் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டன.
கேரளாவில் லோக்சபா தேர்தல் நாளை நடக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த, 19ம் தேதி தேர்தல் நடந்த அன்று, கேரள மாநிலம் வயநாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டது.
அதேபோல, கேரளாவில் தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழக எல்லையில் நம்பியார் குன்னு, தாளூர், அய்யன்கொல்லி, எருமாடு ஆகிய நான்கு டாஸ்மாக் கடைகள் நேற்று காலை முதல் 26 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மூடப்பட்டுள்ளது.
கடந்த, 27 ஆம் தேதி மதியம் இந்த நான்கு கடைகளும் மீண்டும் திறக்கப்படும். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சி நிர்வாகிகளுக்கும் சரக்கு கொடுப்பதை தடுக்கும் வகையிலும், மதுவால் பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், கேரளா மாநிலம் முழுவதும், 3- நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் மது பிரியர்கள் கோரஞ்சால், குந்தலாடி உள்ளிட்ட டாஸ்மாக் மது கடைகளை நாட துவங்கி உள்ளனர்.

