/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஸ்டாண்ட் அருகே திறந்த வெளியில் பஸ்கள் நாள்தோறும் அவதிப்படும் பயணிகள்

ADDED : மே 22, 2024 12:27 AM

கூடலுார்:கூடலுாரில் பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, 5.42 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனை, பிப்., 25ம் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய பணிமனையை மாற்றாமல்; பணிகள் முழுமை பெறாமல், பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதனால், பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்த போதிய இடம் இன்றி, ஊட்டி உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு செல்லும், பஸ்கள், பஸ் ஸ்டாண்ட் அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். பயணிகள் திறந்தவெளியில் காத்திருந்து பஸ் ஏறி செல்ல வேண்டி உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பயணிகள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட் பணிகள் முழுமை பெறாத நிலையில், தேர்தலுக்காக, திறந்து வைத்தனர். பஸ் ஸ்டாண்ட் திறந்து மூன்று மாதங்கள் ஆகியும், பணிமனை பகுதியில் பஸ் ஸ்டாண்ட் விரிவு படுத்த நடவடிக்கை இல்லை.
இதனால், ஏற்பட்ட இடப்பற்றாக்குறையால், பஸ்கள் சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன.
தற்போது, மழைக்காலம் என்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.