/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் வி.ஏ. ஓ., உட்பட இருவர் கைது
/
சிட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் வி.ஏ. ஓ., உட்பட இருவர் கைது
சிட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் வி.ஏ. ஓ., உட்பட இருவர் கைது
சிட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் வி.ஏ. ஓ., உட்பட இருவர் கைது
ADDED : ஏப் 06, 2024 01:20 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ்; விவசாயி. தும்மனட்டி கிராமத்தில், 6.5 சென்ட் பூர்வீகமாக விவசாய நிலம் உள்ளது.
நிலத்துக்கான சிட்டாவில் தன் பெயரை சேர்க்க ஜெயகணேஷ், உரிய ஆவணங்களுடன் ஜன., மாதம் 'இ- - சேவை' மையத்தில் விண்ணப்பித்தார். பின், தும்மனட்டி வி.ஏ.ஓ., கற்பகத்தை சந்தித்து விபரத்தை தெரிவித்துள்ளார்.
அவர், '3,000 ரூபாய் தனியாக கொடுத்தால் தான் சிட்டாவில் பெயர் சேர்க்க முடியும்' என, தெரிவித்துள்ளார். பணம் கொடுக்காததால் ஜெயகணேஷின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.
மீண்டும், பிப்., 9ம் தேதி இ--சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது, 'தந்தையின் இறப்பு சான்று, வாரிசு சான்று இணைக்கவில்லை' எனக்கூறி, வி.ஏ.ஓ., கற்பகம் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.பின், வி.ஏ.ஓ., கற்பத்தை தொடர்பு கொண்ட ஜெயகணேஷ் விண்ணப்பம் நிராகரித்தது குறித்து கேட்டுள்ளார். 'லஞ்சம் தந்தால்தான் சிட்டாவில் பெயர் சேர்க்க முடியும்' என, கற்பகம் கறாராக கூறியுள்ளார்.
மீண்டும் வி.ஏ.ஓ., கற்பகத்தை தொடர்பு கொண்ட ஜெயகணேஷ், 'எனது விண்ணப்பத்துடன், உறவினர் குமார் என்பவருக்கும் சிட்டாவில் பெயர் சேர்க்க வேண்டும்' என, கூறியுள்ளார். 'அப்படியெனில் இரண்டு விண்ணப்பங்களுக்கு, 8,000 ரூபாய் தர வேண்டும்' என, கற்பகம் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, இரண்டு விண்ணப்பத்திற்கு, 6,000 ரூபாய் தர ஒப்பு கொண்டார். மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் இருவரும் இ--சேவை மையத்தில் விண்ணப்பித்தனர்.
அதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயகணேஷ், ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜெயகுமார், உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, நேற்று ரசாயனம் தடவிய, 6,000 ரூபாய் பணத்தை, ஊட்டி அரசு கலைக்கல்லுாரி செல்லும் சந்திப்பில், கற்பகம் வாகனத்தில் வைத்து ஜெயகணேஷ் கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை வாகனம் ஓட்டி வந்த சதீஷ்குமார் என்பவரிடம் அவர் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இருவரையும் பிடித்து கைது செய்தனர்.
விசாரணை நடந்து வருகிறது.

