/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழைக்கு சகதியான தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு சிரமம் பயணிகளுக்கு சிரமம்

ADDED : மே 23, 2024 05:05 AM

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மழைக்கு சேறும், சகதியாக மாறியதால் சுற்றுலா பயணியர் சிரமத்துடன் மலர்களை ரசித்து வருகின்றனர்.
ஊட்டியில் கோடை சீசனை ஒட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டது. ரோஜா கண்காட்சி நிறைவு பெற்றது. மலர் கண்காட்சி இம்மாதம், 26 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பாரம்பரிய மலை ரயில் இன்ஜின், டிஸ்னி வேல்டு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
பூங்கா முழுவதும் சேறும், சகதியாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு இடையே மலர்களை ரசிக்க வேண்டிய நிலை உள்ளது. பல லட்சம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட பாரம்பரிய மலை ரயில் இன்ஜின், டிஸ்னி வேல்டு இரு வாரங்கள் கடந்ததால் மழைக்கு மலர்கள் அழுகி உதிர்ந்து வருகிறது. எனவே, தோட்டக்கலை துறையினர் உரிய நடவடிக்கு எடுக்க வேண்டும்.