/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பத்ரகாளியம்மன் கோவிலில் சிம்ம வாகனத்தில் அம்மன் உலா
/
பத்ரகாளியம்மன் கோவிலில் சிம்ம வாகனத்தில் அம்மன் உலா
பத்ரகாளியம்மன் கோவிலில் சிம்ம வாகனத்தில் அம்மன் உலா
பத்ரகாளியம்மன் கோவிலில் சிம்ம வாகனத்தில் அம்மன் உலா
ADDED : ஏப் 05, 2024 10:31 PM

குன்னுார், : குன்னுார் பத்ரகாளியம்மன் கோவிலில், 25வது ஆண்டு அம்மன் திருவீதி உலாவின் போது, சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
குன்னுார் மவுன்ட் பிளசன்ட் பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில், 25வது ஆண்டு விழா மற்றும் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா கடந்த, 3ம் தேதி துவங்கியது. அதில், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி சரஸ்வதி, துர்கா ஹோமம் ஆகியவற்றுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் அபிஷேக அலங்காரம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை ஆகியவை நடந்தது. நேற்று தீர்த்தகுட ஊர்வலம், சிறப்பு அபிஷேக பூஜை, மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தது.
மாலையில் பத்ரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார். கோவிலில் துவங்கிய ஊர்வலம் மவுன்ட் பிளசன்ட் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

