/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பறக்கும் படை எண்ணிக்கை 72 ஆக உயர்வு: தேர்தல் செலவின பார்வையாளர் நடவடிக்கை

ADDED : ஏப் 01, 2024 11:49 PM
ஊட்டி:நீலகிரி லோக்சபா தொகுதியில் பறக்கும் படை எண்ணிக்கை, 72 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதியில் ஊட்டி, குன்னுார் ,கோத்தகிரி, மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
அதில், 'ஊட்டி, கூடலுார், குன்னுார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தற்போது, 9 பறக்கும் படை குழுக்கள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள்,' என, மொத்தம், 57 குழுக்கள் இயங்கி வந்தன.
இந்நிலையில், தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் அவர்களின் அறிவுரைப்படி, நீலகிரி (தனி) லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க ஏதுவாக. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கூடுதலாக தலா, 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கூடலுார் சட்டசபை தொகுதியில் கூடுதலாக மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது, நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட. ஊட்டி, கூடலுார், குன்னுார் ஆகிய சட்ட சபை தொகுதிகளில் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை, 72 ஆக உயர்த்தப்பட்டுஉள்ளது.