/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரிப்பு
/
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 14, 2024 11:53 PM

கோத்தகிரி;கோத்தகிரியில் அ.தி.மு.க.,வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து, திரைப்பட இயக்குனர் ஜெயபிரகாஷ் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோத்தகிரி பஸ்நிலையம் மற்றும் அரவேனு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களிடம் ஜெயபிரகாஷ் பேசுகையில், ''ஜனநாயகத்தின் மீதும், மாநில மக்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர் பொதுசெயலாளர் பழனிசாமி. அவர் விவசாயிகளின் காவலன். படித்த இளைஞரான, லோகேஷ் தமிழ்செல்வனை நீலகிரி தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தியுள்ளார். அவர் வெற்றி பெற்றால், தொகுதி மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வார். மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் பேசி, தீர்வு காண்பார்.
இந்த தொகுதி எம்.பி., ராஜா, இதுவரை தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மீண்டும் அவர் வெற்றி பெற்றால், மக்களுக்கு திட்டங்கள் எதுவும் கிடைக்காது. அதனால், மக்கள் சிந்தித்து, வெற்றி வேட்பாளருக்கு, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து, அ..தி.மு.க., வேட்பாளரை வெற்றிபெற செய்யவேண்டும்,'' என்றார்.

