/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அ.தி.மு.க., மாநில நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்
/
அ.தி.மு.க., மாநில நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்
அ.தி.மு.க., மாநில நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்
அ.தி.மு.க., மாநில நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்
ADDED : ஏப் 23, 2024 08:37 PM

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் சில்வர் கிளவுட் அருகே உள்ள தனியார் எஸ்டேட் பகுதியில், காட்டெருமை வேட்டையாடியது தொடர்பாக, எஸ்டேட் பணியாளர்கள் பைசல், 46, ஷாபுஜாக்கப்,48, ஆகியோரை வனத்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். இவர்கள், அல்லுார்வயல் அருகே உள்ள, அ.தி.மு.க., மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனின் எஸ்டேட்டில் பணி செய்தது தெரிந்தது. இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியை, எஸ்டேட் பொறுப்பாளர் சுபைர் மூலம், புளியாம்பாறையை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவரிடம் வாங்கியுள்ளனர்.
தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின், இடத்தின் உரிமையாளர் சஜீவன், சுபைர், ஸ்ரீகுமார் ஆகியோரை வனத்துறையினர் குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பைசல், சாபுஜாக்கப், பரமசிவம் ஆகியோரை வனத்துறையினர், கூடலுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான சஜீவன், சுபைர், ஸ்ரீகுமார் ஆகியோரை, 3 தனிப்படை அமைத்து வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
சஜீவன் வெளிநாடு சென்று இருக்கலாம் என்ற தகவலை தொடர்ந்து, அவர் மீது, 'லுக்-அவுட் நோட்டீஸ்' வெளியிட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

