/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏ.டி.சி., பகுதியில் நகராட்சி சார்பில் கூடுதல் கடைகள்
/
ஏ.டி.சி., பகுதியில் நகராட்சி சார்பில் கூடுதல் கடைகள்
ஏ.டி.சி., பகுதியில் நகராட்சி சார்பில் கூடுதல் கடைகள்
ஏ.டி.சி., பகுதியில் நகராட்சி சார்பில் கூடுதல் கடைகள்
ADDED : ஏப் 04, 2024 11:46 PM

ஊட்டி:ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் நகராட்சி சார்பில், கூடுதலாக இரண்டாவது கட்டமாக, தற்காலிக கடைகள் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில், பழைய கடைகளை இடித்து புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' தளத்துடன், விசாலமாக கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக, மொத்தம், 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 18 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது.
அதுவரை, மார்க்கெட்டில் கடை வைத்த வியாபாரிகள் பாதிக்காத வகையில், ஊட்டி ஏ.டி.சி., அருகே ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், நகராட்சி சார்பில் கையகப்படுத்திய இடத்தில், இதுவரை, 120 தற்காலிக கடைகள் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது, வியாபாரம் நடந்து வருகிறது.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக கூடுதலாக, மேலும் பல கடைகள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

