/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதரால் வாகன ஓட்டிகள் திணறல் அகற்ற நடவடிக்கை தேவை
/
புதரால் வாகன ஓட்டிகள் திணறல் அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : மே 13, 2024 11:55 PM

ஊட்டி:ஊட்டி - சோலுார் சாலையில் இருப்புறம் வளர்ந்துள்ள முட்புதரால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ஊட்டி அருகே சோலுார் கிராமத்தில், 14 கிராமங்கள் உள்ளன. தவிர, பழங்குடியினர் கிராமங்களும் உள்ளன. இப்பகுதிகளுக்கு ஊட்டியிலிருந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. தனியார் வாகனங்களும் அதிகளவில் சென்று வருகிறது. சோலுார் சந்திப்பிலிருந்து, 8 கி.மீ., தொலைவிற்கு இருப்புறமும் முட்புதர் அடர்ந்து வளர்ந்துள்ளது.
குறுகலான சாலையில் இருபுறம் வளர்ந்துள்ள முட்புதரால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமப்படுகின்றனர். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளை முட்புதர் அவ்வப்போது பதம் பார்ப்பதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
'நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் இருப்புறம் வளர்ந்துள்ள முட்புதரை அகற்ற வேண்டும், என, அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் விரைவில் ஆய்வு மேற்கொண்டு முட்புதரை அகற்ற வேண்டும்.

