/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் அதிகாலையில் சாலையில் விழுந்த மரம்; போக்குவரத்து பாதிப்பு; மின் சப்ளை துண்டிப்பு

ADDED : ஏப் 03, 2024 10:25 PM

கூடலுார் : கூடலுார் இரும்புபாலம் பகுதியில் அதிகாலை, சாலையில் மரம் விழுந்ததால், தமிழகம்- கேரளா இடையே, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின் சப்ளையும் துண்டிக்கப்பட்டது.
நீலகிரியில் கோடை வெயில் தாக்கத்தால் வறட்சி அதிகரித்துள்ளது.இந்நிலையில், நேற்று, அதிகாலை, 2:00 மணிக்கு கோழிக்கோடு சாலை இரும்புபாலம் அருகே, சாலையில் விழுந்த மரத்தால், நீலகிரி -கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டது.
மேலும், மின்கம்பம் உடைந்து மின்கம்பிகள் சேதமடைந்தது. இதனால், புளியம்வயல் பகுதிக்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்கை பயன்படுத்தி ஒரு மணி நேரம் போராடி, 3:00 மணிக்கு மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி, மின் சப்ளை வழங்கும் பணியில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இச்சாலையில் பல ஆபத்தான மரங்கள் உள்ள நிலையில் அவை மழையில் விழுகிறது. தீயணைப்பு துறையினர் அகற்றி வருகிறனர்.
ஆனால், நர்த்தகி அருகே, மிகவும் பழமையான விலை உயர்ந்த அயனி பலா மரத்தை, அரசு அதிகாரிகள் வெட்ட வைத்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரங்கள் வெட்டப்பட்டது குறித்து, அரசு துறையினர் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.