/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குட்டியை பிரிய மனமில்லாமல் தாய் யானை பாச போராட்டம்
/
குட்டியை பிரிய மனமில்லாமல் தாய் யானை பாச போராட்டம்
குட்டியை பிரிய மனமில்லாமல் தாய் யானை பாச போராட்டம்
குட்டியை பிரிய மனமில்லாமல் தாய் யானை பாச போராட்டம்
ADDED : ஏப் 21, 2024 12:35 AM

கூடலூர்:நீலகிரி மாவட்டம், முதுமலையை ஒட்டியுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நேற்று மதியம், பந்திப்பூர் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம், தாயுடன் வந்த யானை குட்டியை புலி தாக்கியது.
ஆனால், தாய் யானை கடுமையாக போராடி புலியிடமிருந்து குட்டியை மீட்டு, சாலையோரம் அழைத்து வந்தது. குட்டி யானையை காப்பாற்றும் முயற்சியில் தாய் யானை ஈடுபட்டது. அவ்வழியாக சென்ற வாகனங்களையும் விரட்ட துவங்கியது.
தகவலறிந்து வந்த கர்நாடகா வனத்துறையினர், வாகன போக்குவரத்தை நிறுத்தினர். தொடர்ந்து, குட்டி யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி குட்டி யானை உயிரிழந்தது.
இறந்த குட்டியை தாய் யானை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றது. இரண்டு மணி நேரத்துக்கு பின் வாகன போக்குவரத்து துவங்கியது.
இறந்த குட்டி யானையை பிரிய மனமில்லாமல் தாய் யானை அருகில் நின்று பாச போராட்டம் நடத்தியது. தாய் யானையை விரட்டி, குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இச்சம்பவம் வன ஊழியர்கள் மற்றும் அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

