/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அன்னமலை கோவிலில் காவடி பெருவிழா கோலாகலம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : ஏப் 14, 2024 11:57 PM

ஊட்டி';நீலகிரியில் பழநி மலை என்றழைக்கப்படும், அன்னமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் காவடி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நடப்பாண்டு காவடி பெருவிழாவை ஒட்டி நேற்று காலை, அன்னமலை முருகன் கோவிலில், காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது.
பின், 8:30 மணிக்கு கோவிலில் துவங்கிய காவடி ஊர்வலத்தை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி துவக்கி வைத்தார். கீழ்குந்தா, கொட்டரக் கண்டி, மஞ்சூர், குந்தா மேல் கேம்ப், மட்டக்கண்டி வழியாக, மதியம், 3: 00 மணிக்கு காவடி ஊர்வலம் வந்தடைந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட முருக பெருமானுக்கு பக்தர்கள் வழிநெடுக பூஜை செய்து வழிப்பட்டனர். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என, பக்தர்கள் காவடி ஏந்தி பாடல் பாடி வந்தனர். சில பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திகடன் செலுத்தினர். காவடி எடுத்து வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினர்.