ADDED : மார் 22, 2024 08:39 PM
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் உங்கள் கனவை நனவாக்க, சரியான கல்வி நிறுவனம், காருண்யா தான்.
காருண்யாவில், பி.டெக்., பாடப்பிரிவுகளான, ரோபோடிக்ஸ், சிவில், ஏரோஸ்பேஸ், கம்யூட்டர் சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி போன்ற 40க்கும் மேற்பட்ட பிரிவுகளில், செயற்கை நுண்ணறிவு சிறப்பு பாடத்திட்டங்களுடன் வழங்கப்படுகிறது. மேலும், வேளாண்மை, எம்.பி.ஏ., வணிகம், தடய அறிவியல், டிஜிட்டல் அறிவியல், மீடியா ஆகிய படிப்புகளுக்கு அட்மிசன் நடந்து கொண்டிருக்கிறது. நடப்புக் கல்வியாண்டு முதல் முதுநிலை உளவியல் பிரிவு தொடங்கப்பட உள்ளது.
மைக்ரோசாப்ட், ஐ.பி.எம்., சி.எம்.டி.ஐ., ஆகிய முன்னனி நிறுவனங்களோடு தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான ஒப்பந்தங்கள் மூலம், காருண்யா மாணவர்கள் அதிநவீன தொழில் நுட்பங்கள் மற்றும் தொழில்சார்ந்த நுண்ணறிவுகளை பெற்று வருகிறார்கள். டி.சி.எஸ்., ஹூண்டாய், அமேசான், டாட்டா, விப்ரோ, இன்போசிஸ் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களில் காருண்யா பல்கலை மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். சமீபத்தில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதில் சிறந்த நிகர்நிலைப் பல்கலைக்கான விருதையும் பெற்றுள்ளது.
மாணவர்களுக்கு பாதுகாப்பான விடுதி வசதியும், கல்லுாரியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்து வசதியும் உள்ளது. மேலும் விபரங்களுக்கு, www.karunya.edu என்ற எண்ணில் அழைக்கலாம்.

