/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயல் போல மாறிய விளையாட்டு மைதானம்; பராமரிப்பு இல்லாததால் இளைஞர்கள் பாதிப்பு

ADDED : செப் 15, 2024 11:30 PM

பந்தலுார் : பந்தலுார் விளையாட்டு மைதானம் சதுப்பு நிலமாக உள்ள நிலையில், இரவு நேரத்தில் வாகனங்களை இயக்கியதால் வயல் போல மாறி உள்ளது.
பந்தலுார் பஜாரின் அருகே பொது விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறையினர் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இதனை முறையாக சீரமைத்து, விளையாட்டு போட்டிகள் நடத்தவும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறவும் நடவடிக்கை எடுக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இந்தப் பகுதி சதுப்பு நிலமாக மாறி உள்ளதால், மழை காலங்களில் தண்ணீர் நிறைந்து, வயலாக மாறிவிடுகிறது.
இந்நிலையில், இரவில் இந்த மைதானத்தில், வாகனம் ஓட்டி சிலர் பயிற்சி எடுக்கின்றனர். இதனால் மைதானம் முழுவதும் வயல் போல மாறி உள்ளது. மேலும், எருமைகளின் மேய்ச்சல் நிலமாகவும் மாறி உள்ளதால், கோடை காலத்தில் மைதானத்தில் விளையாட முடியாத நிலை ஏற்படும்.
விளையாட்டு வீரர்கள் கூறுகையில், 'இந்த மைதானத்தை முறையாக சீரமைத்து, விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற ஏதுவாக மாற்றி தர வேண்டும், மழை காலங்களில் தண்ணீர் வழிந்தோட உரிய கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.