/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண் லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி பலி
/
மண் லாரி சக்கரத்தில் சிக்கி கட்டட தொழிலாளி பலி
ADDED : மார் 28, 2024 05:38 AM

பாலக்காடு, : துாங்கி கொண்டிருந்த கட்டட தொழிலாளி மீது லாரி ஏறியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அயிலுாரை சேர்ந்தவர் ரமேஷ், 45. கட்டுமான கூலி தொழிலாளியான இவர், அப்பகுதியில் ஜெயபிரகாஷ் என்பவரின் புது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மண் இறக்க வந்த லாரி, அங்கு தரையில் படுத்து துாங்கி கொண்டிருந்த ரமேஷ் மீது ஏறியது. இதில், லாரி சக்கரத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
தகவல் அறிந்து வந்த நெம்மாரா போலீசார், அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் விஸ்வம்பரன் போலீசில் சரணடைந்தார்.

