/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தும் 65 வகையான பொருட்கள் தேர்தல் பிரிவுக்கு வந்தாச்சு

ADDED : ஏப் 09, 2024 09:15 PM
ஊட்டி;நீலகிரியில் லோக்சபா தொகுதியில், 'பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., - நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள்,' என, 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 6 தொகுதிகளில், 1500க்கு மேற்பட்ட ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டு சாவடிகளை தயார்படுத்தும் பணியை தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஓட்டு சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சென்னையில் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரம், விவி., பேட்., கன்ட்ரோல்யூனிட், வாக்காளர் பட்டியல், வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் மை, பதிவேடு உட்பட, 90 வகையான பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதில், 65 வகையான பொருட்கள் சென்னையில் கொள்முதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள பொருட்கள் விரைவில் வர உள்ளது. மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் பொருத்த கூடிய 'பேலட் சீட்' சென்னையில் அச்சடிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது.