/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'ஐ.ஆர்., 20' ரக நெல்லுக்கு விலை இல்லாததால் கவலை
/
'ஐ.ஆர்., 20' ரக நெல்லுக்கு விலை இல்லாததால் கவலை
ADDED : மார் 16, 2024 07:40 AM
எருமப்பட்டி : 'ஐ.ஆர்., 20' ரக நெற்பயிர் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
எருமப்பட்டி யூனியனில், போடிநாய்க்கன்பட்டி, கோம்பை, சாலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கொல்லிமலையில் பெய்யும் மழையை நம்பி, விவசாயிகள் நெல் நாற்றுகளை நடவு செய்து வந்தனர்.
ஆனால், இந்தாண்டு கொல்லிமலையில் போதிய மழை இல்லாததால் அடிவார பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீரின்றி வறண்டது. இதனால், குறைந்த விவசாயிகளே நெற்பயிர்களை நடவு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த நவ., மாதத்தில் கிணற்று பாசனத்தை நம்பி பழையபாளைம், முத்துக்காப்பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள், 120 நாட்களில் அறுவடை செய்யும், 'ஐ.ஆர்., 20' ரக நெல் நாற்றுகளை நடவு செய்தனர்.
இந்த நெற்பயிர் தற்போது அறுவடை செய்யும் நிலைக்கு விளைச்சலடைந்துள்ளது. ஆனால், இந்த நெல்லிற்கு தற்போது போதிய விலை கிடைக்கவில்லை என, விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

