/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
/
மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
ADDED : ஆக 24, 2024 07:16 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., அம்பேத்கர் நகர், 15வது வார்டில் வாரச்சந்தை உள்ளது. இங்கு, வியாழக்கிழமை தோறும் சந்தை நடைபெறும். காய்கறி வாங்க ஏராளமான மக்கள் வந்து செல்-வதால், கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இதையடுத்து, இந்த சந்தையை மேம்படுத்த, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 120 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டும் பணி, கடந்தாண்டு துவங்கப்பட்டது. இப்பணி சில மாதங்களுக்கு முன் முடிந்தது.
ஆனால், தற்போது வரை இந்த வாரச்சந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் உள்ளது. டவுன் பஞ்., நிர்வாகம் வாரச்சந்தையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.